search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ பன்னீர் செல்வம்"

    • மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • ஓ.ராஜா உள்பட 3 பேர் ஆஜராகாத நிலையில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர் கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.

    கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமின் பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

    இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். 4 தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்துக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கு விசாரணையின் போது 3 பேர் மட்டும் நீதிபதி முரளிதரன் முன்பு ஆஜராகினர்.

    அப்போது ஓ.ராஜா உள்பட 3 பேர் ஆஜராகாத நிலையில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (13-ந்தேதி) வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். எனவே நாளை குற்றம் சாட்டப்பட்ட ஓ.ராஜா உள்பட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
    • இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, "அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்" மற்றும் "புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என 2 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    இந்த சூழ்நிலையில், கடந்த மூன்றாண்டுகளில் வெறும் 60,567 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்திருப்பது, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தி.மு.க. அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்பதும், இளைஞர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கிட்டத்தட்ட 50 சதவீதம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு துறையிலும், பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தையும், அந்தப் பணியிடங்கள் அனைத்தும் எப்போது நிரப்பப்படும் என்பதற்கான அட்டவணையையும் உடனடியாக வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மின்சாரக் கட்டணம் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
    • பெரும்பாலான குடும்பங்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மழை நின்று 36 மணி நேரம் கடந்தும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடியாத அவல நிலை நிலவுகிறது. பொதுமக்கள் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி, இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி அல்லலுற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    இது மட்டுமல்லாமல், பல வீடுகளுக்குள் மழைநீர் உட்புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டுள்ள மரச் சாமான்கள், தொலைக் காட்சி பெட்டி, குளிர் சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் என பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் மழை நீரினால் கடுமையாக சேதமடைந்து உள்ளன.

    மொத்தத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், மின்சாரக் கட்டணம் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான குடும்பங்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில், மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை குறைந்தபட்சம் ஒரு மாதம் நீட்டித்து தருமாறு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • ஆதித்தனார் ஐயாவின் பிறந்தநாள் நன்னாளில் அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றார்.
    • அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட போராட்டம் நடத்தி அம்மா நிலையான அரசாணையை மத்திய அரசு வெளியிட செய்தார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி சொன்னார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அன்போடு, பாசத்தோடு, தமிழர் தந்தை என்று போற்றப்படும் ஆதித்தனார் ஐயாவின் பிறந்தநாள் நன்னாளில் அ.தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றார்.

    காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்ட போராட்டம் நடத்தி அம்மா நிலையான அரசாணையை மத்திய அரசு வெளியிட செய்தார். அதை மாற்றவோ திருத்தம் செய்யவும் முடியாது என்றார்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பிளவு குறித்த கேள்விக்கு, தமிழர் தந்தை பிறந்தநாளில் நல்லவைகளை பற்றி மட்டும் பேசுவோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 வந்தே பாரத் ரெயில்களை திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கும் என 2 புதிய ரெயில்கள் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும் இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

    எனவே வந்தே பாரத் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
    • பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'பூரண மதுவிலக்கு' என தேர்தல் பிரசாரத்தின்போது மேடைக்கு மேடை முழங்கிய தி.மு.க., இன்று ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பிறகு, மது விற்பனையை அதிகப்படுத்துவதில் முனைப்புக் காட்டுவதன் காரணமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குடிப்பழக்கத்தைத் தவிர்த்து மனிதனாக எல்லோரும் வாழ நடவடிக்கை எடுக்காமல், குடிப்பழக்கத்தை அதிகப்படுத்தி மனித குலத்தை அழிக்கும் பணிகளை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருவதைப் பார்க்கும்போது, ஆக்குவது கடினம், அழிப்பது சுலபம் என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

    தி.மு.க. அரசின் பூரண மதுக்கொள்கை காரணமாக கடந்த 28 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில், மதுக்குடித்ததை தட்டிக் கேட்டதால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தக் கொடூரச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலையுண்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும். மதுவால் சட்டம் ஒழுங்கை அரசே சீரழித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது.
    • இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் பல டாப் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். தன் நடிப்பினாலும், ஸ்டைலினாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த ரஜினியை 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

    இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் நெல்சனுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார்- காசோலைகளை பரிசாக வழங்கினார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினியை  முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று சந்தித்தார். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • எடப்பாடி பழனிசாமியோ ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.
    • அ.தி.மு.க. கொடியில் சிறிய அளவில் மாற்றங்களை செய்து புதிய கொடியை வடிவமைக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை அங்கீகரித்திருந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்த வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது.

    இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் முழுமையான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகவே அமைந்திருக்கிறது.

    இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட செயலாளர், கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர் என பதவிகளையும் கொடுத்து வந்துள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து செயல்படும் எண்ணத்திலேயே இருந்து வந்தனர்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.

    அதேநேரத்தில் அவருடன் இருக்கும் ஆதரவாளர்கள் அனைவரையும் தன்பக்கம் இழுத்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் உள்ளார்.

    இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். தன்னுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் சென்று விட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை ஓ.பி.எஸ். உணர்ந்துள்ளார்.

    இதையடுத்து ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள அவர் காய் நகர்த்தி வருகிறார். இப்படியே தனது நிலைப்பாட்டை கொண்டு சென்றால் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க. பக்கம் சென்று விடுவார்கள் என்கிற அச்சமும் ஓ.பி.எஸ்.சுக்கு ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஆதரவாளர்களை தன்வசப்படுத்தி வைத்துக் கொள்வதற்காக புதிய கட்சியை தொடங்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. கொடியில் சிறிய அளவில் மாற்றங்களை செய்து புதிய கொடியை வடிவமைக்க திட்டமிட்டு உள்ள ஓ.பன்னீர் செல்வம் புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. அல்லது புரட்சி தலைவி அ.தி.மு.க. என 2 பெயர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:-

    எங்கள் அணியில் ஏற்கனவே 82 மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கிளை கழக நிர்வாகிகளும் செயல்பட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருப்பது போன்று ஒன்றிய அளவிலும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாசறை, பேரவைக்கும் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களை எந்த சூழ்நிலையிலும் கைவிட்டு விடக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளார். இதனாலேயே விரைவில் புதிய கட்சியை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். புரட்சி தலைவி, புரட்சி தலைவர் ஆகிய வார்த்தைகள் கட்சியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

    அதேநேரத்தில் 'அம்மா' என்கிற பெயருடன் புதிய கட்சியை தொடங்குவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஓ.பி.எஸ். தொடங்க உள்ள புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க. என்கிற பெயரையே சூட்டுவதற்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.

    அ.தி.மு.க.வுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைக்கும். அதற்கான வழியை டெல்லி பா.ஜனதா தலைவர்கள் நிச்சயம் செய்து தருவார்கள் என மலைபோல நம்பி இருந்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்றாகி விட்டது.

    அதேநேரத்தில் கோர்ட்டு மூலமாக ஏதாவது விடிவு காலம் பிறக்கும் என்றும் நம்பி இருந்தோம். அந்த வகையிலும் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து செயல்பட வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இதனால் எங்கள் பலத்தை காட்ட தனிக்கட்சி ஒன்றுதான் தீர்வு என்றாகி விட்டது.

    புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை விரைவில் பெரிய கூட்டத்தை கூட்டி அறிவிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

    அதற்கான இடம், தேதி ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும். தனிக்கட்சியை தொடங்கிய பின்னர் பாராளுமன்ற தேர்தலுக்குள் பெரிய பொதுக்கூட்டத்தையோ அல்லது மாநாட்டையோ நடத்தவும் முடிவு செய்துள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களம் இறங்குவோம். அப்போது எங்களது வாக்கு வங்கி என்ன என்பது தெரிய வரும்.

    தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.சுக்கு இருக்கும் செல்வாக்கு என்ன? என்பதை கண்டிப்பாக நிரூபித்துக் காட்டுவோம். இது அவரது எதிர்கால வெற்றிக்கு வழிவகுப்பதாக அமையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயல்.
    • பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 1½ வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் என்ன கருத்தினைத் தெரிவித்தாரோ அதற்கேற்ப, 'மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தவறில்லை' என்று விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அமைச்சரின் இதுபோன்ற செயல் நீதிக்கும், நியாயத்திற்கும் புறம்பான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. இதிலிருந்து விசாரணை அறிக்கை என்பது ஒரு தலைபட்சமானது என்பது தெளிவாகிறது.

    மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தன்னை சந்தித்துப் பேசும்போது, வார்த்தைக்கு வார்த்தை "குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை" என்று சொல்லி தன்னை புண்படுத்தியதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் தெரிவிக்கிறார். மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தன் ஒன்றரை வயது மகனின் கை அகற்றப்பட்டு, மனம் நொந்து போயுள்ள நிலையில், குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயல். இதுவும் கடும் கண்டத்திற்குரியது.

    சென்னை தலைமை மருத்துவமனையிலேயே இதுபோன்ற நிலை இருந்தால், மாவட்ட மருத்துவமனைகளின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்தத் தவறுக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டுமென்றும், இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக குழந்தையின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5500 கிலோ தக்காளி மட்டுமே ஒரு நாளைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது.
    • தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால் ஏற்பட்டுள்ள விலை உயர்வின் காரணமாக விவசாயிகளுக்கு ஏதாவது லாபம் கிட்டுகிறதா என்றால் நிச்சயம் இல்லை.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 35,000-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள், குறிப்பாக நகர்ப்புறங்களிலேயே ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் இருக்கின்ற நிலையில், வெறும் 82 ரேஷன் கடைகள், 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 147 கடைகள்மூலம், ஒரு கடைக்கு 100 கிலோ என்ற அடிப்படையில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பும், லட்சணக்கணக்கான கிலோ தக்காளி ஒரு நாளைக்கு மக்களுக்கு தேவைப்படுகின்ற நிலையில், மேற்படி கடைகள் மூலம் வெறும் 5500 கிலோ தக்காளி மட்டுமே ஒரு நாளைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது.

    தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால் ஏற்பட்டுள்ள விலை உயர்வின் காரணமாக விவசாயிகளுக்கு ஏதாவது லாபம் கிட்டுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு சென்னை மற்றும் இதர நகரப் பகுதிகளில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு கிலோ வாட்டிற்கான நிரந்தரக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 102 ரூபாயாகவும் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.
    • கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில், அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படாது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1-7-2023 முதல் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது போல் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் பொதுச் சேவை பயன்பாட்டிற்கான ஒரு யூனிட் கட்டணம் 8 ரூபாயில் இருந்து 8 ரூபாய் 15 காசாகவும், ஒரு கிலோ வாட்டிற்கான நிரந்தரக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 102 ரூபாயாகவும் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக, பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல், மீண்டும் கூடுதல் கட்டணத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு ஏழை, எளிய, நடுத்தர மக்கள், குறிப்பாக வாடகைக்கு குடியிருப்போர் ஆளாக்கப்பட்டு உள்ளார்கள். வீடுகளில் உபயோகிக்கப்படும் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதும், வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக வீட்டு பொதுச் சேவை பயன்பாட்டிற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படக்கூடாது என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில், அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படாது.

    வீட்டு நுகர்வோர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருத்தில் கொண்டு, வீட்டு நுகர்வோருக்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதே கட்டணத்தை குடியிருப்புகளுக்கான பொதுச் சேவை பிரிவிற்கு வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கட்டுமானத் துறை உள்ளிட்ட பல துறைகள் முடங்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது.
    • நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 'இனி தொழில் செய்யவே முடியாது' என்ற நிலைக்கு வந்துள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரி அனுமதி பெற்றிருப்போர் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள், கடந்த 3 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்குக் காரணம், சரளைக் கற்கள் போன்ற சிறு கனிமத்திற்குகூட கனிமத் திட்டம் அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியுள்ளதாகவும், இதுபோன்ற நிபந்தனைகளுடன் தொழிலை தொடர முடியாது என்றும், பெரிய கனிமத்திற்குத்தான் இது பொருத்தமாக இருக்கும் என்றும், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

    கல் குவாரி உரிமையாளர்கள், கல் உடைக்கும் உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தின் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும், கட்டுமானத் துறை உள்ளிட்ட பல துறைகள் முடங்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். எனவே, கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் வேலை நிறுத்தத்தினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை அழைத்துப் பேசி அதற்கு ஒரு சுமூக தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×